• Wed. Oct 15th, 2025

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய ஆசிரியை!

Byadmin

Sep 16, 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முறையான பணி ஆணை இன்றி இரண்டு பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்களையும் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு அனுப்ப குறித்த பெண் முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த பாலர் பாடசாலை ஆசிரியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரு பெண்களும் மலேசியாவில் வீட்டு வேலைக்கு அனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்ற போது பாலர் பாடசாலை ஆசிரியையின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் பாலர் பாடசாலை ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 18ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *