• Sat. Oct 11th, 2025

நாடு பூராவும் 221 முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு

Byadmin

Sep 26, 2023

இம்முறை வெளிவந்த உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில் நாடு பூராவும் 221 முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு . இது 10.6% மாகும். 

அல்ஹம்துலில்லாஹ்.

(இதில் சிங்கள மொழி மூலம் எழுதிய மாணவர்கள் உள்வாங்கப்படவில்லை)

இவற்றுள் 57 மாணவர்கள் Merit basis மூலம் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது 6.8% மாகும்.

மேலும் 60 மாணவர்கள் 3A சித்தி பெற்றுள்ளனர். சிறந்த தீவுமட்ட நிலையாக 77 ஆம் Rank இனை ஏறாவூர் அலிகார் கல்லூரி மாணவன் அப்கர் அஹமட் பெற்றுள்ளார். இவரது Z Score 2.7002 ஆகும்.

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு 05 மாணவர்கள் மாத்திரமே தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. இது வெறுமனே 2% மாகும்.

சனத்தொகைக்கு ஏற்ப மருத்துவதுறைக்கு  மாணவர்கள் தெரிவு  இருந்த போதிலும் Merit basis இல் செல்லுகின்ற, கொழும்பு பல்கலைக் கழகம் நுழைகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அடுத்தடுத்த  வருடங்களில் இந்த குறைகளும் நிவர்த்திக்க முயற்சிப்போம்.

மொத்த 221 பேரில் மாவட்ட ரீதியான தெரிவு( +/- 1):

அம்பாறை 48
மட்டக்களப்பு 26
திருகோணமலை 25
குருணாகல் 21
புத்தளம் 23

கொழும்பு 10
கண்டி 10
கேகல்ல 16
மாத்தளை 9
அனுராதபுர 5
பதுளை 5
நுவெரெலிய 4
கழுத்துறை 3
மாத்தறை 5
பொலனருவை 2
வவுனியா 5
மொனராகலை 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *