காரத்தன்மையை சேர்ந்த மிளகாயில் பல நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக மிளகாயை எடுத்துக் கொள்வதால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
மிளகாயின் தீமைகள்?
நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மிளகாயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அந்த பிரச்சனையின் தீவிரத்தை அதிகமாக்கி விடும்.
புளிப்பு ஏப்பம் வருவதை போன்று உணர்ந்தால், மிளகாய் சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக தயிர் மற்றும் மோரை அதிகம் சாப்பிடலாம்.
மிளகாயில் உள்ள கேப்சசைன் ஒரு மலமிளக்கியாக செயல்படுவதால், அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.
உணவில் தினமும் மிளகாயை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், உடம்பின் வெப்பத்தை அதிகரித்து, அதிகளவில் வியர்வையை உண்டாக்கி, உடல் தூர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
காரம் நிறைந்த உணவை அதிகம் சாப்பிடும் போது, நாக்கில் உள்ள சுவை உணர் திறன் குறைந்து விடும்.