கொழும்புக்கு அண்மையில் குடிநீர் விநியோகக் குழாய் ஒன்றில் பெரும் வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு தெற்குப் பகுதிக்கு குடிநீரை விநியோகம் செய்வதற்கான பிரதான குழாய் இவ்வாறு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தெற்குப் பிரதேசத்தின் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டிய பகுதிகளில் தற்போது குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மேற்குறித்த பிரதேச மக்கள் கையிருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நாளை மாலை நான்கு மணிவரை அப்பிரதேசங்களுக்கான குழாய் நீர் விநியோகம் தடைப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.