• Wed. Jun 10th, 2026

டயான கமகேவிற்கு எதிரான மனு தள்ளுபடி

Byadmin

Oct 31, 2023

இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து  உத்தரவிடுமாறு கோரி  தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

டயான கமகே, பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு தெரிவாவும், அமரவும், வாக்களிக்கவும் தகுதியில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹெராத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *