• Sat. Oct 11th, 2025

எமது குடும்ப நண்பர் ஒருவரை இழந்துவிட்டோம்

Byadmin

Aug 30, 2017

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான அல்ஹாஜ்.ஏ.எச்.எம் அஸ்வர்அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைகிறேன் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவமும் ஆளுமையும் நிறைந்த ஒரு சிரேஷ்ட முஸ்லிம் தலைவரை முஸ்லிம் சமூகம் இழந்து நிற்கிறது.மறைந்தமுன்னாள் அமைச்சர் அஸ்வர் இலங்கையின் இரு பெரும் தேசியக் கட்சிகளில் இடம் பிடித்து அங்கெல்லாம் முஸ்லிம்சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்ததை எவரும் எளிதில் மறந்து விட முடியாது.

அன்னார் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்கு செய்தஅளப்பரிய சேவைகள் என்றும் அழியாதவை.மர்ஹூம் அஸ்வர் அவர்களின் அரசியல் வெற்றிடம் யாராலும்நிரப்பப்பட முடியாது.முஸ்லிம்களுக்கு நாட்டில் பிரச்சினைகள் வந்த காலப் பகுதிகளில் நாடாளுமன்றத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் அவைகள் பற்றி பேசாமல் இருந்ததில்லை.

இவர் சு.காவில் இணைந்த நாள் முதல் எங்கள் குடும்ப நண்பராக என்னுடைய தந்தையுடன் மிக நெருக்கமாகவும் உண்மைக்கு உண்மையாகவும் இருந்தார். இவரிடமிருந்து எந்தவிதமான தவறான் செயல்களையும் எப்போது நாங்கள் கண்டதில்லை. இவர் சமூகத்துக்கு ஒரு முன் மாதிரியான மனிதர்.

இலங்கை பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரித்த முஸ்லீம் தலைவர்களில் மிக அதிகமான தடவைகள் சமூகம் பற்றிமன்றில் உரையாற்றிய பெருமை மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களை சாரும்.அதற்கு பாராளுமன்ற ஹன்சாட்எனும் ஆவணம் சான்று பகரும்.

தன்னுடைய முதுமையையும் கருத்தில் கொள்ளாது இறுதிக் காலங்களிலும் சமூகத்தின் விடிவுக்காய் சதா உழைத்தமர்ஹும் ஏ. எச்.எம். அஸ்வர் எனும் நாமம் என்றும் மக்கள் மனங்களில் இருந்து அகலாது என்பது திண்ணம்.

அன்னாரின் நற் கருமங்களை இதயத்தில் பொருந்தி மாட்சிமை மிகு மறுமை வாழ்வுக்காய் பிரார்த்திப்பதே நாம் அவருக்குச் செய்யும் உன்னதமான நன்றிக்கடனாகும் என அகத்தி அனுதாப செய்தியில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *