• Fri. Nov 28th, 2025

எரிபொருள் விலையில் மாற்றம்

Byadmin

Nov 1, 2023

இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *