இலங்கை முஸ்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் மறைந்த மர்ஹும் ஏ. எச்.எம். அஸ்வர் அவர்ளுக்கு தனியானதொரு இடமுண்டு. அந்நாரது மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும் மட்டுமல்ல முழு இலங்கை மக்களுக்கும் பெரும் பேரிழப்பாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களின் மறைவையொட்டி முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் மக்காவில் இருந்து விடுத்துள்ள அனுதாபச் செய்தில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தொடர்ந்து தெரிவிக்கையில்
மறைந்த அமைச்சர் அஸ்வர் ஒரு அரசியல் வாதி மட்டுமல்ல. சிறந்த பேச்சாளராகவும் சிறந்த எழுத்தாளராகவும் இலக்கிய ஆர்வலராகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் சமுதாயப் பற்றுமிக்க சேவனாகவும் எனப் பல பன்முக ஆளுமைகளைக் கொண்டவராக விளங்கினார். அன்பாகப் பேசுவதிலும் பண்பாகப்பழகுவதிலும் நல்ல இனிய குணங்களையுடையவர்.
நீண்ட கால அரசியல் அனுபவங்களையுடைய இவர் ஓயாது கடைசி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு பக்கதுணையாக இருந்துள்ளார் என்பது அவரது அரசியல் வாழ்வுக்கு ஆதாராகும். எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஒரு பக்கம் சென்றாலும் தான் மட்டும் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பேன் என்று மார்தட்டி நின்றவர். இதனால் சிங்களப் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஒரு பெரும் மதிப்பு உண்டு.
இஸ்லாமிய இலக்கிய உலகில் வாழ்வோரை வாழ்த்துவோம் என்கின்ற பணி எழுத்துறை சார்ந்த அனைவர் மத்தியிலும் ஒரு நல்ல மதிப்பை பெற்று இருக்கிறது. இதுவே போதும் இவரது சேவைக்கு ஒரு சான்று குறிப்பிடுதவற்கு.
எனவே அந்நாரது இழப்பால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்த்தார் மற்றும் உற்றார் உறவினர் நலன்விரும்பிகள் அனவைருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-இக்பால் அலி –