• Tue. Oct 14th, 2025

ஆட்டோ சாரதியின் நேர்மை

Byadmin

Nov 7, 2023

கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கிடைத்த குறித்த பையை 24 மணி நேரத்திற்குள், உரிமையாளரின் பெண்ணை கண்டுபிடித்து வழங்க முச்சக்கர வண்டி சாரதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கெக்கிராவ – ஒலுகரத கிராமத்தில் வசிக்கும் 48 வயதுடைய என்.பி பாலித பீரிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த செயலை செய்துள்ளார்.

இந்த கைப்பையின்  உரிமையாளர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், அவர் தனது பையை மறந்துவிட்டு இறங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர், சாரதி கைப்பையை கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தார். உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கைப்பையின் உரிமையாளர் இபலோகம – மஹமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் எஸ். தயாவதி என்ற 53 வயது பெண்ணுடையதாகும்.

முச்சக்கரவண்டி சாரதி கெக்கிராவ பொலிஸாரின் உதவியுடன் கைப்பையை உரிமையாளரிடம் மீள வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *