முஸ்லிம்களே!எமது சகோதரர்கள் மியன்மார் – ரோஹின்யாவில் அழித்து, ஒழித்து, கொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது உயிர்கள், உடமைகள் என அனைத்திலும் கைவைக்கப்படுகின்றன. தீயிட்டு , முழு முஸ்லிம்களையும் கொலைசெய்கின்றனர். பெண்களின் கற்பு என அனைத்தும் சூறையாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒரு சில நாடுகளைத்தவிர அனைத்து நாடுகளும் இதை எதிர்த்து ஒரு கண்டன அறிக்கைக் கூட வெளியிடவில்லை.
இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் உலமா சபை இன்னும் பல அமைப்புக்கள் ஆட்சியை மாற்றவும், ஆட்சியை கொண்டு வரவும், அரசியல்வாதிகளுக்காகவும் குனூத் – கூட்டு துஆ, நோன்பு நோற்றல் என அனைத்தையும் செய்யும் நிலையில், மியன்மாருகாக வாய் திறக்காமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
மியன்மாரில் எமது சகோதர முஸ்லிம்களின் இந்த நிலைமைக்கு எதிராக நாம் வாய் திறக்காமல் ஊமைக் கண்ட கனவுபோல இருக்கிறோம்.
ஏன், எமது சகோதரர்களுக்காக – ஓர் ஆர்பாட்டமோ, ஒரு கண்டன கூட்டமோ நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம். குறைந்தது நாம் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காக அல்லாஹ்விடம் நோன்பு பிடித்தும், தொழுகைகளிலும் பிரார்த்தனை செய்வோம்.
எங்களால் ஆயுதம் ஏந்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. துஆ மட்டும்தான் எம்முடைய ஆயுதம் அதுதான் நபி (ஸல்) எமக்கு காட்டி தந்த வழிமுறை.
யா அல்லாஹ்! எமது மியன்மார் உறவுகளை அக்கிரகாரர்களிடம் இருந்து நீ பாதுகாப்பாயாக ஆமீன்.
உம்ரா (UMRA)
ஐக்கிய முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம்