• Tue. Dec 2nd, 2025

வீதியில் கைவிடப்பட்ட மனித நேயம்

Byadmin

Dec 11, 2023

பூகொடை பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய நபரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டுச் சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் 83 வயதுடைய நபர் ஒருவர் மீது லொறி மோதியதுடன், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறி சாரதி அவரை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இருப்பினும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் காயமடைந்த நபரை இறக்கிவிட்டு லொறியின் சாரதி தப்பியோடிய விதம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
எனினும் அதன் பின்னர் வயோதிபர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தப்பியோடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பூகொடை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பூகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *