• Tue. Dec 2nd, 2025

வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ

Byadmin

Dec 11, 2023

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *