ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 350 இலங்கையர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் உணவு கூட இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் அவர்கள், கோரிக்கை விடுக்கின்றனர்.
ஜோர்தானில் சிக்கியுள்ள 350 இலங்கையர்கள்
