• Sun. Oct 12th, 2025

குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்!

Byadmin

Dec 28, 2023

இந்த நாட்களில் குழந்தைகளிடையே பல சுவாச நோய்கள் பரவி வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கூறுகிறார்.

நோய்வாய்பட்டு பரிசோதனைக்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தைகளுக்கு கொவிட் தொற்று உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து வைத்தியர் தீபால் பெரேரா கூறுகையில்,

மேலும் ”கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு குறிப்பாக வைரஸ் காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் உண்டு. பரிசோதித்த போது சில இன்ஃப்ளூயன்ஸா ஏ அல்லது பி கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு கொவிட் பொசிட்டிவ் இருந்தது, ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா உள்ளது. கூடுதலாக, காய்ச்சலைப் பற்றி பேசும்போது, வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பலர் உள்ளனர். வாந்தி, பேதி, காய்ச்சல், வயிற்றுவலி போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம்.”

இந்நிலையில், பல நாடுகளில் கொவிட் பரவி வருவதால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது முக்கியம் என்றும் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.

”அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குறிப்பாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நீரிழிவு நோயாளிகள், சுவாசம் மற்றும் புற்றுநோயாளிகள் முக கவசம் அணிய வேண்டும். காய்ச்சல் மற்றும் கொவிட் பரவலாம்”

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *