• Tue. Oct 14th, 2025

வரி இலக்கத்தை பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

Byadmin

Jan 4, 2024

10 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே வரி இலக்கங்களைப் பெற்று அல்லது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர்  கீர்த்தி நாபான  “Big Focus” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனவரி 1ஆம் திகதி எமது திணைக்களத்தில் 437,547 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று அது 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. வருமான ஏற்றத்தாழ்வையே பிரதானமாக இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த வருமானப் பங்கீட்டைப் பார்த்தால் அதிக வருமானம் கொண்ட குழு சுமார் 20%. உள்ளது. அந்த குழுவில், மொத்த வருமானத்தில் 60% அதிகமாக பகிரப்பட்டுள்ளது.”
“20 சதவிகிதம் என்று சொன்னால் சுமார் 50 லட்சம் பேர் என்று அர்த்தம். அப்படியானால் இந்த 50 லட்சம் பேரை அடையாளம் காண்பதுதான் எங்களின் முதல் இலக்கு. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான வரி வருமானத்தைப் பெறும் திறன் கொண்டவர்கள்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *