• Sun. Oct 12th, 2025

கட்டார்- சவூதி உரையாடலையடுத்து சவூதி கடும் அதிருப்தி

Byadmin

Sep 11, 2017

கட்டார் தலைவர் மற்றும் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி  உரையாடலை    அடுத்து கட்டாருடனான பேச்சு வார்த்தைகளை இடைநிறுத்துவதாக சவூதி அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து கட்டார் துண்டிக்கப்பட்டி ருக்கும் நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தே இரு தரப் பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

எனினும் கட்டார் உண்மைகளை திரித்துக் கூறுவதாகவும், அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை கைவிடுவதாகவும் இதனைத் தொடர்ந்து சவூதி அறிவித்துள்ளது.

கட்டார் தீவிரவாதத்திற்கு உதவுவ தாக இந்த நான்கு நாடுகளும் குற்றம் சாட்டியபோதும், கட்டார் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த சர்ச்சையால் நான்கு நாடு களும் கடந்த ஜூன் 5 தொடக்கம் கட்டாருடனான உறவுகளை துண் டித்துள்ளன.

சவூதி தனது தரைவழி எல்லையை மூடியதோடு நான்கு நாடுகளும் கட்டாருடனான கடல் மற்றும் வான் வழிகளை துண்டித் தன. இந்நிலையில் அமெரிக்க ஜனா திபதி டொனால்ட் டிரம்ப் இரு தரப்புடனும் வெவ்வேறாக பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து
கடந்த வெள்ளிக்கிழமை கட்டார் மற்றும் சவூதி தலைவர்கள் தொலை பேசியில் உரையாடியுள்ளனர்.

இந்த பேச்சு பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது.

பிரச்சியை ஆரம்பித்த பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான முதல் தொலைபேசி உரையாடலாக இது இருந்தது.

பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய பேச்சுவார்த்தையில் கட்டார் எமீர் ஷெய்க் தமிம் பின் ஹமத் அல்தானி மற்றும் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இரு நாட்டு அரச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

கட்டார் தலைவர் நான்கு நாடு களின் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த விருப்பம் காட் டியதாக சவூதி அரச ஊடகம் இந்த தொலைபேசி உரையாடல் தொடர் பில் விபரம் அளித்துள்ளது. எனினும் சர்ச்சைக்குரிய விடயங்களை தீர்க்க இரு தூதுவர்களை நியமிக்கும் சவூதி யின் பரிந்துரை இறைமை கொண்ட நாடுகளுக்கு பொருந்தாது என்று கட்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை குறித்து கட்டார் தீவிரம் காட்ட
வில்லை என்று குற்றம்சாட்டிய சவூதி, இரு தரப்புக்கும் இடையி லான பேச்சுவார்த்தைகள் இடைநி றுத்தப்படுவதாக அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *