• Tue. Oct 14th, 2025

பெலியத்த ஐவர் படுகொலை – விசாரணையில் வௌிவந்த உண்மைகள்

Byadmin

Jan 25, 2024

பெலியத்தவில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹக்மன பொலிஸார் மோட்டார் சைக்கிள் மற்றும் வான் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல இந்த வேனை பயன்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *