சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளின் போது காயமடைந்த பெரசூட் வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.
இன்று (30) காலை, காலிமுகத்திடலில் சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொண்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர், பெரசூட் ஷோ ஒத்திகையின் போது ஏற்பட்ட அனர்த்தத்தால் தரையில் விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்களும், இரண்டு விமானப்படை வீரர்களும் காயமடைந்தனர்.
அவர்களில் இருவர் கொழும்பில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் விழுந்தனர்.
காற்றின் திசையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே விபத்துக்குக் காரணம் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
காயமடைந்த நான்கு பெரசூட் வீரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்திற்குள்ளான பெரசூட் வீரர்களின் தற்போதைய நிலை
