• Sun. Nov 2nd, 2025

19 வயதுடைய இளைஞன் பலியான விதம்!

Byadmin

Feb 8, 2024

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் களுத்துறையில் இருந்து ஹென்டியங்கல நோக்கி பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹென்டியங்கல பாலத்திற்கு அருகில் இருந்த சுவரில் மோதியுள்ளது.

இளைஞன் பலத்த காயமடைந்து களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

களுத்துறை தெற்கு பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *