• Sat. Apr 4th, 2026

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நாளையும்

Byadmin

Feb 13, 2024

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14) கொழும்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *