• Mon. Apr 6th, 2026

யாழில் தவளை ஐஸ்கிரீம்

Byadmin

Feb 15, 2024

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14) ஐஸ்கிரீம் குடிக்க சென்றவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த குளிர்பான விற்பனை நிலையம் முத்திரையிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *