• Sat. Oct 11th, 2025

பொலிஸாருக்கு நிதியுதவி வழங்க பொலிஸ்மா அதிபர் அனுமதி!

Byadmin

Feb 29, 2024

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.  
பொலிஸார் தங்கள் கடமைகளைச் செய்யும் போது எதிர்க்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்காக தனிப்பட்ட சட்ட உதவியைப் பெற இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது கடமைகளின் எல்லைக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் பட்சத்தில் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு அரசாங்க சட்ட உதவியை வழங்க மறுக்கும் அல்லது அது தொடர்பான சட்ட உதவிகளை வழங்காத சந்தர்ப்பங்களில், ஒரு தனியார் சட்டத்தரணி மற்றும் பிற சட்ட சேவைகளின் உதவியைப் பெறுவதற்கு பொலிஸார் எதிர்க்கொள்ளும் நிதி நெருக்கடிகளுக்கு இந்த முறை நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
 இது தொடர்பான அமைச்சரவை யோசனை பொது பாதுகாப்பு அமைச்சர்  திரன் அலஸினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கு முன்னர் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *