• Mon. Oct 13th, 2025

ஊழியர்களுக்கு விசேட வைரஸ் தடுப்பூசி!

Byadmin

Mar 3, 2024

நுவரெலியா மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உணவு மற்றும் பானங்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் டைபாய்ட் தடுப்பூசியை வழங்குவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபையின் நகர சுகாதார பிரிவு கடந்த 01 ஆம் திகதி முதல் இந்த வாரம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள வசந்த விழாவிற்கு இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு வருகை தரவிருப்பதால், சலமெனெல்லா தொற்று மற்றும் உணவினால் பரவும் டைபாய்டு காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைவரின் உணவு நுகர்வு எதிர்கால பாதுகாப்பிற்காக இந்த தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக என கித்சிறி ஹேரத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *