• Sat. Apr 4th, 2026

ஜனவரியில் ஏற்றுமதி வருமானம் 970 மில்லியன் அமெரிக்க டொலர்

Byadmin

Mar 5, 2024

2024 ஜனவரியில் ஏற்றுமதி மூலம் இலங்கையின் வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.77% சரிவைக் குறிக்கிறது என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 2023 உடன் ஒப்பிடுகையில், விவசாய ஏற்றுமதிகள் 3.58% ஓரளவு அதிகரிப்பைக் காட்டியுள்ளது. தேயிலை, ரப்பர் மற்றும் ரப்பர் பொருட்கள், தேங்காய் அடிப்படையிலான பொருட்கள் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *