வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது நீல நிறம் கொண்ட புதிய ஐஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.