• Sat. Apr 4th, 2026

கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!

Byadmin

Mar 8, 2024

கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கடலலையில் சிக்குண்டு கடலில் மூழ்கியுள்ளார்.
அப்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் குறித்த பெண் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சார்ஜன்ட் மஞ்சுள ( 72167 ), பொலிஸ் கான்ஸ்டபிள் லஹிரு (20373)  மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான் (19407 ) ஆகியோரினால் வெளிநாட்டுப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
47 வயதான இத்தாலிய பெண் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *