• Sun. Apr 5th, 2026

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி

Byadmin

Mar 16, 2024

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து  உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *