• Sun. Apr 5th, 2026

பல மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறந்த மாற்றம்

Byadmin

Mar 18, 2024

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பல மாதங்களின் பின்னர் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது. 
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 309.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 230.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 220.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 395.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  380.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *