• Tue. Apr 7th, 2026

28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி!

Byadmin

Mar 26, 2024

குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ கிராம் அரிசியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் 10 கிலோ அரிசியும் மே மாதத்தில் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதத்திற்கான 10 கிலோ அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மே மாதத்திற்கான அரிசி அம்மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
 இதேவேளை, அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *