• Sun. Oct 12th, 2025

Onmax DT நிறுவனத்தின் 3500 கோடி மோசடி – அதிர்ச்சியில் உயிரிழக்கும் மக்கள்

Byadmin

Mar 29, 2024

இலங்கையில் Onmax DT நிறுவனத்தின் மோசடியில் சிக்கிய பலர் உயிரை மாய்த்துள்ளதாக வைப்பாளர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பணத்தை இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மக்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து கிடைத்த பணத்தில் இதற்காக முதலீடு செய்துள்ளனர்.

அந்த நிறுவனம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து 3500 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு செய்துள்ளது.

Onmax DT நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்ட பணத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மிகச் சிறிய பகுதியையே கண்டுபிடித்துள்ளது.

பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பான தகவல்களை விசாரணை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை எனவும் வைப்பாளர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *