• Sat. Oct 11th, 2025

சர்வதேச நீதிமன்றம் இன்று, இஸ்ரேலுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

Byadmin

Mar 29, 2024

தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட இனப்படுகொலை வழக்கில் ஒரு பகுதியாக, காசாவிற்கு உடனடியாக, தடையின்றி உதவிகளை வழங்குமாறு சர்வதேச நீதிமன்றம் (ICJ) இஸ்ரேலுக்கு இன்று -28- உத்தரவிட்டுள்ளது.

உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள், தங்குமிடம், உடைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரத் தேவைகள், அத்துடன் மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தடையின்றி வழங்குவதற்கான உத்தரவை ICJ ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை இஸ்ரேல் “தாமதமின்றி, ஐக்கிய நாடுகள் சபையுடன் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டும்” என்றும் ICJ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *