• Sat. Oct 11th, 2025

புனித யாத்திரிகர்களுக்கு சிறப்பு மருத்துவ சலுகை வழங்கி வரும் இளவரசர் சுல்தான் மருத்துவ மையம்

Byadmin

Apr 4, 2024

இரு புனித தலங்களையும் தரிசிக்க ஆண்டுதோறும் வருவபர்களது யாத்திரிகையை இலகுபடுத்தும் வகையில் அதி உயர் சேவைகளை, சலுகைகளை தொடர்ந்தும் சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கி வருவது நாம் அறிந்ததே. 

அந்த வகையில் மதீனா நகரில் இளவரசர் சுல்தான் ஆயுதப்படை மருத்துவமனையின் பருவகால மருத்துவ மையமானது, புனித மஸ்ஜித் நபவியில், தரிசிக்க வருபவர்கள் மற்றும் குடிமக்களுக்கு மருத்துவ மற்றும் அவசர சிகச்சை சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த மையம் கடந்த சனிக்கிழமை வரை அதன் சேவைகளின் பயனாளிகளின் எண்ணிக்கையை விவரிக்கும் வகையில் புள்ளிவிபரமொன்றை வெளியிட்டுள்ளது, இதில் 4,906 பெண்கள் மற்றும் 7,253 ஆண்கள் உட்பட மொத்தம் 12,159 நோயாளிகள், அவசர சிகிச்சை தேவையுடையவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், 37 நோயாளிகள் அந்நாட்டு சுகாதார அமைச்சுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

மஸ்ஜிதை தரிசிக்க வருபவர்களுக்கு மருத்துவ மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான இந்த மையம், 8 கிளினிக்குகளை கொண்ட நோயாளிகளைப் பராமரிப்பதற்கான அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இது 18 அவசர கண்காணிப்பு படுக்கைகள், தலா ஆறு கண்காணிப்பு படுக்கைகள் கொண்ட இரண்டு நடமாடும் மருத்துவ கிளினிக் வாகனங்களையும் கொண்டுள்ளது. இது முறிவுகளுக்கு சிகிச்சையளிக்கும் மையம், ஊட்டச்சத்து சிகிச்சையுடன் சம்மந்தப்பட்ட ஒரு மையம், ஆய்வுகூடம் மற்றும் மருந்து விநியோக மையம் உட்பட பல பிரிவுகளாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *