சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலுடனான பதட்டத்தை தணிக்க தெஹ்ரானை வலியுறுத்துமாறு அமெரிக்கா கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அழைப்புகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதன் அடிப்படையில் அமெரிக்கா சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.