• Mon. Apr 6th, 2026

8 வீதி விபத்துக்களில் 10 பேர் பலி

Byadmin

Apr 15, 2024

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து விதிமுறைகளை சாரதிகளை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *