• Sun. Apr 5th, 2026

சதொச ஊடாக பெரிய வெங்காய இறக்குமதி!

Byadmin

Apr 20, 2024

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காய ஏற்றுமதியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், முதற் கட்டமாக இலங்கைக்கு 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை  ஏற்றுமதி செய்ய  தீர்மானித்துள்ளது.
வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு கலந்துரையாடியதுடன், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2 வாரங்களில் முதல் கையிருப்பாக 2,000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இன்று எம்மிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் தேவைப்படுகின்ற பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *