• Fri. Oct 31st, 2025

காசாவுக்காக 4 மணித்தியாலத்திற்குள் சேர்ந்த 52 இலட்சம் ரூபாய் நிதி

Byadmin

Apr 29, 2024

காசா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காசா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் நேற்று (27) நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்றது.இதில் நிந்தவூர் பிரதேசத்தில் ஜும்மா பள்ளிவாசலின் ஆளுகைக்குள் காணப்படும் 32 பள்ளிவாசல்களின் கீழ் வசிக்கும் பொதுமக்களின் நிதிப் பங்களிப்பின் கீழ், 52 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தொடர்ந்தும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட நிதிகள் அனைத்தையும் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *