• Tue. Oct 14th, 2025

சீனாவில் பாரிய மண்சரிவு – பலர் பலி

Byadmin

May 1, 2024

தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் வாகனங்கள் சிக்கிய விபத்தில்19 பேர் பலியாகினர்.
மேலும் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் இன்றைய உள்ளூர் நேரப்படி அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் அவ்வழியே பயணித்த வாகனங்கள் மண்சரிவில் சிக்கிய விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள Meizhou நகரத்திற்கும் Dabu கவுண்டிக்கும் இடையேயான வீதியின் ஒருபகுதியிலேயே அதிகாலை 2:10 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 18 வாகனங்களும், அதில் பயணித்த 49 பேரும் ஆபத்தில் சிக்கினார்கள்.
இறுதியாக வந்த தகவலின்படி, இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 
மேலும் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், நெடுஞ்சாலை பகுதியளவு உருக்குலைந்து இருப்பதையும், அதன் சரிவின் அடிவாரத்தில் சிக்கிய வாகனங்ளையும் காட்டுகின்றன.
மீட்பு நடவடிக்கைக்கு உதவ சுமார் 500 பேர் அடங்கிய குழு அங்கே முகாமிட்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பு, அவசரகால தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆகியோருடன் சுரங்க மீட்பு குழுவினரும் அதில் அடங்கியுள்ளனர். 
தென் சீனாவின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தொழில்துறை ஆற்றல் மையமான இந்த பிராந்தியம், அண்மைய கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *