• Sat. Apr 18th, 2026

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம்!

Byadmin

May 6, 2024

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06)  உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
3 ஆம் தர கிராம அதிகாரி ஆட்சேர்ப்புக்கான பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் மே மாதம் 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அலரிமாளிகையில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *