• Mon. Apr 13th, 2026

கோடிக்கணக்கான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Byadmin

May 9, 2024

2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *