• Sun. Apr 12th, 2026

திருமணத்திற்கு சென்று உயிரை விட்ட பெண்!

Byadmin

May 11, 2024

தம்புள்ளை ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணை ஹிரிவடுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் மேலும் சிலருடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரில் மூன்று வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *