• Wed. Apr 8th, 2026

டொனால்ட் லு – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

Byadmin

May 13, 2024

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் இன்று (13) சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *