முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காட்டி முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம் தரப்பு பாரிய பங்காற்றிய போதும் முஸ்லிம்களை இந்த அரசாங்கம் இரு பொருட்டாகவே கருதவில்லை என்பதற்கு இது தவிர பல விடயங்களை நாம் குறிப்பிட முடியும்.
அதேநேரம் ஒரு நாட்டின் அடிப்படை சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவரும் போது முஸ்லிம்களை மூன்றாம் பட்சமாக நடத்துவதை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்.
முஸ்லிம்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்த ராஜித போன்றவர்கள் அவரது தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற அலுத்கமை கலவரத்திற்கு இழப்பீட்டையோ நீதியையோ பெற்றுக்கொடுக்க எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் முஸ்லிம்களை உசுப்பேற்றி அவர்களின் உணர்ச்சிகளில் விளையாடியதையே அவதானிக்க முடிந்தது.
அண்மையில் 20 வது திருத்தற்கு வாக்களித்த கிழக்கு முஸ்லிம் மாகாண தலைமைகள் 20ஐ நிறைவேற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை கூறாமல் மஹிந்தவை தோற்கடித்துவிட்டதாக அரசியல் செய்தார்கள்.
நேற்று முன்தினம் மாகாண சபை தேர்தல் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட சில நல்லாட்சிக்கு ஆஸ்தான முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று இடம்பெற வாக்களிப்பின் போது தேர்தலை நடத்தினால் மஹிந்தவின் கை ஓங்கிவிடும் என்ற காரணத்தை முன்னிருத்தியே நல்லாட்சியின் தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தில் முஸ்லிம்களால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சியினால் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற உள்ளமையை தடுத்து நிறுத்த தவறிவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியை காட்டி முஸ்லிம் வாக்குகளை பறித்து இப்போது முஸ்லிம்களுக்கு ஆப்புவைப்பவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளை மஹிந்தவை வந்துவிடுவார் என்பதை காட்டி பறிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை கவலைக்குறிய விடயமாகும்.
-அ. அஹமட் –