• Mon. Oct 13th, 2025

மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்

Byadmin

Sep 22, 2017

பாதுக்க மீப்பை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தாக்குதலில் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியுள்ளது

கொழும்பு அவிஸ்ஸாவலை பிரதான வீதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் பள்ளிவாசல் இருப்பதுடன் அதி பாதுகாப்பு வலயமான இலங்கை செய்மதி பூமி நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே அமைந்திருக்கின்றது.

பள்ளிவாசல் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக அங்கு கடமையாற்றும் பிரதம இமாம் மெளலவி அப்துர் ரஸ்ஸாக் தெரிவிக்கையில்,

வழமை போன்று நேற்று 10 மணியளவில் பள்ளிவாசலின் கதவுகளை மூடிவிட்டு நித்திரைக்கு சென்றோம். பள்ளிவாசல் உட்பகுதியில் இங்கு கடமையாற்றும் முஅத்தின் நித்திரை கொண்டிருந்தார் திடீரெ பெரும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. கண்விழித்து பார்க்கையில் பள்ளிவாசலுக்குள் கல் ஒன்று இருந்துள்ளது.

அத்துடன் கண்ணாடி துகள்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக்கண்டு என்னிடம் விடயத்தை தெரிவித்தார். உடனே வெளியில் சென்று பார்த்தேன். ஆனால் அங்கு யாரையும் காணவில்லை.

என்றாலும் பிரதான பாதை வழியாகவே குறித்த கல் எறியப்பட்டிருந்தது.

இனந்தெரியாத யாராவது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இதனை செய்திருக்கலாம். ஏனெனில், நாட்டில் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காலத்தில்கூட சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலுக்கு எந்த அச்சுறுத்தலும் இருந்ததில்லை.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பொலிஸார் இங்கு வந்து நிலைமையை அவதானித்துவிட்டு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுவிட்டு
சென்றனர் என்றார்.

சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அறிந்துகொள்ள பொலிஸ் குழுவொன்றை பள்ளிவாசலுக்கு அனுப்பி நிலைமைகளை கேட்டறிந்துகொண்டுள்ளோம்பாதையில் செல்லும் ஒருவர் கல்லொன்றை எறிந்து விட்டு சென்றுள்ளதாகவே ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *