• Tue. Oct 14th, 2025

LPL திட்டமிட்டபடி இடம்பெறும்

Byadmin

May 23, 2024


எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை நேற்று (22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா பிரிமியர் லீக்  இடைநிறுத்தியதுடன், எதிர்காலத்தில் அதன் உரிமையில் மாற்றத்துடன் போட்டிகள் நடத்தப்படும் என உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்பிஎல் போட்டியின் நேர்மை மற்றும் தரத்தை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்தை முன்மொழிய முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நபரை மே 31 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *