• Wed. Apr 8th, 2026

யானை தாக்கியதில் இளைஞன் வபாத்

Byadmin

Jun 15, 2024

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில்  (14)இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.இவ்வாறு உயிர் இழந்தவர் கிண்ணியா இடிமனை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வயது(26)அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் என்பவர் ஆவார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தந்தையுடைய பண்ணைக்கு சென்றவேலையில் மறைந்திருந்த யானை தாக்கியுள்ளது

இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவரின் சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *