• Mon. Oct 13th, 2025

72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை!

Byadmin

Jun 16, 2024

தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்னை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது. இவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவருக்கு ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
தொடர்ந்து, அந்த முதியவர், சிறுமியை திருமணம் செய்ய முயன்றபோது, தகவலறிந்து வந்த பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி முதியவரை கைது செய்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் தந்தை தப்பியோடியுள்ளார். அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முதியவர் மற்றும் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க முயன்ற நபர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ராஜன்பூர் மற்றும் தட்டா பகுதியில் இதுபோன்று நடைபெற இருந்த திருமண நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *