• Sun. Oct 12th, 2025

கஃபதுல்லாஹ்வின் திறப்பாளர், இறையழைப்பை ஏற்றார்

Byadmin

Jun 22, 2024

திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார்

🕋 ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பில் தான் அந்த சாவி இருக்கிறது.

சவூதி மன்னர் புனித கஃபதுல்லாஹ்வில் நுழைய வேண்டும் என்றாலும், இந்த குடும்பத்தினர் தான் திறந்து விட வேண்டும்.

தற்போது ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 109 வது தலைமுறையினரான கண்ணியமான அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருக்கிறது.

அந்த மாண்பாளர் நேற்றைய தினம் இறையழைப்பை ஏற்றுள்ளார்.

இன்று -22- சுப்ஹு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் ஹாரமில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு ஜன்னத்துல் முஅல்லா கப்ருஸ்தானில் நல்லடக்கம் 
انا لله وانا اليه راجعون الله يرحمه ويغفر له ويسكنه فسيح جناته يارب العالمين. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *