• Sat. Oct 11th, 2025

டக்வொர்த் லுவிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்!

Byadmin

Jun 26, 2024

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.
ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஃப்ராங்க் டக்வொர்த் மற்றும் சக புள்ளியியல் நிபுணரான டோனி லுவிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட டக்வொர்த் லுவிஸ் முறை, மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறை 1997 இல் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 2001 இல் துண்டிக்கப்பட்ட விளையாட்டுகளில் திருத்தப்பட்ட இலக்குகளை அமைப்பதற்கான நிலையான முறையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டக்வொர்த் மற்றும் லுவிஸின் ஓய்வுக்குப் பிறகு இந்த முறை டக்வொர்த் – லுவிஸ் – ஸ்டெர்ன் முறை என மறுபெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த முறையில் அவுஸ்திரேலிய புள்ளிவிவர நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் சில மாற்றங்களைச் செய்தார்.
டக்வொர்த் மற்றும் லுவிஸ் இருவரும் ஜூன் 2010 பிரித்தானிய பேரரசில் உறுப்பினர் பதவியைப் பெற்றனர்.
டக்வொர்த் லுவிஸ் முறையானது சிக்கலான புள்ளியியல் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *