• Sat. Apr 4th, 2026

சீன  எக்சிம் வங்கியுடனும் இணக்கம்

Byadmin

Jun 26, 2024

இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் தீர்வுகள் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாரிஸில் சீன அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் லியோவ் மினை சந்தித்ததாகவும், அங்கு இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உரிய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ கையொப்பங்கள் இடம்பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்று பாரிஸில் இடம்பெற்ற சந்திப்பில், இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு இணக்கத்தை இலங்கை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *