• Tue. Jun 23rd, 2026

புதிய சட்டமா அதிபர் நியமனம்!

Byadmin

Jul 12, 2024

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ. பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ.பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (12) பிற்பகல்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ. பாரிந்த ரணசிங்க இலங்கையின் 49ஆவது சட்டமா அதிபர் ஆவார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *